பூதேரிக் கோட்டை

அமைவிடம் - பூதேரிக் கோட்டை
ஊர் - பூதேரிக் கோட்டை
வட்டம் - தேன்கனிக்கோட்டை
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பூதேரிக்கோட்டையில் காணப்படுகின்ற கற்திட்டைகள் சற்று உயரமாகக் காணப்படுகின்றன. கல்வட்டங்கள் ஒரு சுற்றினை மட்டும் கொண்டு விளங்குகின்றன. பல கற்திட்டைகள் சிதிலமடைந்துள்ளன. எனினும் எண்ணிக்கையில் அதிகளவில் கற்திட்டைகள் காணப்படும் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னப்பகுதியாக பூதேரிக்கோட்டை விளங்குகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பரந்தாமன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த பூதேரிக்கோட்டை என்னும் என்னும் ஊரின் மலைப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் பல சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கற்திட்டைகள் யாவும் மல்லசந்திரம் கற்திட்டைகளை ஒத்தவை. எனினும் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன.